தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட கலைஞர்கள் குறைவானவர்கள். அவர்களில் முக்கியமானவர் கங்கை அமரன். இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் எனப் பல்வேறு துறைகளில் பங்களித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியான இவர், தமிழ் திரையிசையிலும் திரைத்துறையிலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்.