Advertisement

சிறப்புச்செய்திகள்

‛அதிசய பிறவி' : ரஜினி பட தலைப்பில் சந்தானம் | விபீஷணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் : ராமாயணா மூலம் பாலிவுட்டில் என்ட்ரி | ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ் | சிரஞ்சீவி படத்தில் இணைந்த கபீர் துகான் சிங் | ராஷ்மிகாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா | இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ஜெயிலர் 2 | மறைந்த தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல் | 'ராமாயணா' படத்தில் சின்ன சின்ன விஎப்எக்ஸ் குறைகளை கண்டுக்காதீங்க: யஷ் பேச்சால் சலசலப்பு | 'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | ஜெயிலர் 3க்கு இப்போதே கதை எழுதும் ரசிகர்கள் : வெளியாகும் ரீல்ஸ்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மரைன் இன்ஜினியர் டூ நடிகர்: சரத் ரவியின் பயணம்

11 அக், 2026 - 05:07 IST
எழுத்தின் அளவு:
Marine-Engineer-to-Actor-:-Sarath-Ravis-journey
Advertisement


மரைன் இன்ஜினியராக இருந்து, குறும்படங்களில் நடித்து தனது திறமையால் ஜெகமே தந்திரம், இரும்புத்திரை, டிசி ஆகிய படங்களில் நடித்து தனக்கான இடத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் சரத் ரவி நம்முடன் பகிர்ந்தது.

முழுப்பெயர் சரத்குமார். அப்பாவின் பெயரான ரவியை படங்களில் நடிக்க துவங்கியதும் அவருக்கு பெருமை சேர்ப்பதற்காக சரத் ரவி என மாற்றிக்கொண்டேன். பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை.

மரைன் இன்ஜினியரிங் முடித்து வேலை பார்த்து கொண்டிருந்த போது கிடைக்கும் விடுமுறை நாட்களில் குறும்படங்களில் நடித்து வந்தேன். சினிமாவில் நடிப்பதே லட்சியம் என்பதால் இன்ஜினியர் வேலையை விட்டு விட்டு சினிமாவிற்குள் நுழைந்தேன்.

முதல் படம் பர்மா. அதன் பின் 'மாரி'. இப்படத்தில் திறமையை வெளிப்படுத்தியதால் 'இரும்புத்திரை' படத்தில் விஷால் உடன் நடிக்க அடுத்த வாய்ப்பும் கிடைத்தது. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் கதாபாத்திரமாகவும், சண்டை காட்சிகளுடன் 15 நிமிடங்கள் எனக்கானதாக இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு நேர்காணலுக்கு சென்றேன். அவர் எனக்கு 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடிகர் தனுஷ் உடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கினார். படப்பிடிப்பு லண்டனில் என்றனர். மரைன் இன்ஜினியராக இருந்த போது பல நாடுகளுக்கு சென்றுள்ளேன்.

ஆனால் லண்டன் செல்வது அதுவே முதல் பயணம். வீட்டில் இருந்த பாஸ்போர்ட்டை மீண்டும் எடுத்த போது வேலைக்கு செல்ல போகிறாயா என பெற்றோர் கேட்டனர். ஆம், ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்ல போகிறேன் என படம் குறித்து தெரிவித்து சென்றேன். தனுஷ் உடன் ஏற்கனவே மாரி படத்தில் நடித்திருந்ததால் என்னை பார்த்தவுடன் தெரிந்து கொண்டார்.

அவரை 'பில்டப்' செய்து 'மதுரை ரவுடியை' லண்டனில் 'டான்' ஆக அழைத்து வருவது முதல் படம் முடியும் வரை அவருடன் பயணிக்கும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இதுவரை 30 படங்கள் வரை நடித்துள்ளேன்.

இயக்குனர் அருண் மாதேஷ் 'டிசி' படத்தில் எனக்கான கதாபாத்திரம் பற்றி சொல்லும் போது என்னை சுற்றியே முழுக் கதையும் இருக்கும் என்றார்.

கதாபாத்திரத்திற்கு தகுந்தாற் போல உடல் எடை அதிகரிக்க வேண்டியிருந்தது.

முதலில் நான் கதாபாத்திரத்திற்கு பொருந்துவேனா என்ற சந்தேகத்தில் அப்பட ஹீரோ லோகேஷ் இருந்தார். ஆனால் ஷூட்டிங் சென்றதும் உங்களின் கதாபாத்திரம் படம் வெளியாகும் போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்றார்.

அவர் சொன்னதை போலவே தற்போது படத்திற்கும், எனது கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாம் என்னவாக நினைக்கிறோமோ, அதை தொடர்ந்து முழு முயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு...3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம் : தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார் இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap