ஜிவி பிரகாஷ் - கவுதம் மேனன் நடிக்கும் '13'; டிசம்பரில் வெளியிட திட்டம் | அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'ஜான் டோ' நவ.,13ல் ரிலீஸ் | 'கடவுள் தந்த பரிசு' படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் கம்போஸ்: இளையராஜாவிற்கு நன்றி சொன்ன ராமராஜன் | 'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு | சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறையால் நியமிக்கப்பட்ட மம்முட்டி | பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன் | வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை | கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி | 'டியூட்' இயக்குநரின் புதிய படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா? | 'ஜெயிலர் 2'ல் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதில் வருத்தம் தான்: தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் |

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அடிக்கடி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சியான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமிதாப் பச்சன் சாய் பல்லவியிடம், "நீங்கள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இறுதியில் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு சாய் பல்லவி, "அது கடவுளால் எழுதப்பட்ட விதி என்றுதான் நம்புவதாகவும், கடவுள் அப்படித்தான் எழுதி இருந்தார்; நான் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விதியில் இருந்தது" என்றும் பக்திபூர்வமாக பதில் தெரிவித்தார். உடனே அருகில் இருந்த ரன்பீர் கபூர் அமிதாப் பச்சனிடம், "சார் அது உண்மைதான், அது கடவுளின் மருந்து சீட்டு போல..! அவங்க கண்டிப்பா நடிச்சாகணும்னு ஆண்டவன் எழுதிவிட்டார்" என்று கலகலப்பாக கூறினார்.




