2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி | பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம் |

1994-ல் ஹிந்தியில் வெளியான 'பண்டிட் குயின்' திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக வலம் வந்த பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருந்தது. சீமா பிஸ்வாஸ் என்பவர் பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேகர் கபூர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 32 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல இயக்குனர் ஹனி தெரான் இயக்க உள்ளார். முதல் பாகத்தை தயாரித்த பாபி பேடி தான் இதையும் தயாரிக்கிறார்.
முதல் பாகம் பெரும்பாலும் பழிவாங்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை மையமாகக் கொண்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் பூலான் தேவி காவல்துறையில் சரணடைந்த பிறகு 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த காலகட்டத்திற்குப் பிந்தைய அவரது வாழ்க்கையையும், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் எதிர்கொண்ட சவால்களையும், சமூக மாற்றங்களுக்கான அவரது பயணத்தையும் இப்படம் பேசுகிறதாம்.
இது குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, "மக்கள் முதல் பாகத்தில் பார்த்த பூலான் தேவியின் வாழ்க்கையை விட அதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. அது பலரும் அறியாத உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்" என்று கூறியுள்ளார்.