சிறப்புச்செய்திகள்:

வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: தில் காட்டும் நடிகை திவ்யா

வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: தில் காட்டும் நடிகை திவ்யா
Advertisement
எழுத்து அளவு


சினிமா உலகில் ஹீரோயின், விருது கனவுகளுடன் நுழையும் பெண்கள் சிலர் மட்டுமே. எந்த பின்புலம் இல்லாமல் "சான்ஸ் கிடைத்தால் போதும் நடிப்பு திறமையால் முன்னணி இடம் பிடிக்கலாம்" என்ற நம்பிக்கையில் வரும் பெண்கள் அதிகம். நல்ல சிந்தனை கொண்ட சில இயக்குநர்கள் இருக்கும் வரை பெண்களின் திறமைக்கு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது, என்கிறார் சென்னையை சேர்ந்த நடிகை திவ்யா.

தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம்...

சமீபத்தில் வெளியான விக்ரம் பிரபுவின் "லவ் மேரேஜ்" படத்தில் ஹீரோவின் அம்மாவாக நடித்துள்ளேன். படத்திற்கு நல்ல விமர்சனமும் பெண்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது. வெளியே செல்லும்போது பலர் என்னை அடையாளம் தெரிந்து அன்புடன் "ஹாய்...", சொல்லி செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.

எனது முதல் படம் ஷார்வி இயக்கிய "பெட்டர் டுமாரோ". போதைப் பொருள் ஆபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உண்மை சம்பவம் தொடர்பான கதை. ஹீரோ மானவ், இப்படத்திலும் ஹீரோவின் அம்மா ரோல் எனக்கு. தவிர "பூங்கோதை", அருண் சிதம்பரம் இயக்கி நடித்த "ஹெட் நர்ஸ்", மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்கள், சீரியல்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். 6 குறும்படங்களில் மெயின் ரோல், "கர்மா" கன்னட வெப் சீரிஸிலும் நடித்துள்ளேன்.

இதுவரை ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டர் தான் அதிகம் கிடைத்துள்ளது. "லவ் மேரேஜ்" படத்திற்காக 32 நாட்கள் சத்தியமங்கலம் அருகே ஷூட்டிங் நடந்தது. அப்போது விக்ரம் பிரபுவின் நிஜ அம்மாவாகவே மாறிவிட்டேன். பள்ளி, கல்லுாரி நாட்களில் நாடகங்கள் தயாரித்து இயக்கியுள்ளேன். கிளாசிக் டான்ஸ் நன்றாக வரும். சினிமாவிற்கு நான் லேட்டாக தான் வந்தேன்.

நடிப்பில் முக பாவங்கள், வசன உச்சரிப்பு முக்கியம். கேமரா முன் கண் அசைவு, உடல் மொழி, உணர்வு வெளிப்பாடு மூன்றும் அவசியம். இவற்றை கொரியன், ஜப்பானிஷ் மொழிப் படங்களில் அதிகம் பார்க்கலாம். நடிப்பு தாகத்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற சினிமாக்களை தேடிப்பிடித்து பார்ப்பேன்.

எனக்கு ரொம்ப பிடிச்ச "வில்லி" கேரக்டர் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் நடிப்பில் கில்லியாய் சொல்லியடிப்பேன். குணசித்திர வேடங்களில் தற்போது 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

உளவியல் கவுன்சிலராகவும் உள்ளேன். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் கண்டிப்பாக தீர்வு உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவேன். கொரோனா பேரிடர் நேரத்தில் பலருக்கும் வீடுகளுக்கு சென்று உளவியல் கவுன்சிலிங் கொடுத்துள்ளேன். தற்போது நடிப்பு தான் என் குறிக்கோள், பேஷன் என்கிறார் திவ்யா.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட

மேலும் படிக்க

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map