சிறப்புச்செய்திகள்:

மவுன ராகம் போல் படம் வேண்டும்: ரசவாதி ரேஷ்மாவின் காதல் ரசனை

மவுன ராகம் போல் படம் வேண்டும்: ரசவாதி ரேஷ்மாவின்  காதல் ரசனை
Advertisement
எழுத்து அளவு


புன்னகையில் பூத்த பூவிதழ், கண்களின் இரு விழியாலும், கன்னத்தில் விழும் சிறு குழியாலும் அழகிற்கே கூடுதல் அழகு சேர்க்கும் பதுமை. "ரசவாதி" திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற ரேஷ்மா வெங்கடேஷ் நம்முடன் பகிர்ந்தது.

சொந்த ஊர் கேரளா மாநிலம். வளர்ந்தது படிச்சது ஊட்டி. பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்த செல்ல மகள். ஊட்டி கல்லுாரியில் பி.காம்., முடித்து பணிக்காக சென்னைக்கு வந்து தற்போது சென்னை வாசியாக மாறிவிட்டேன்.

சென்னைக்கு வந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தேன். பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணி செய்தேன். அதில் கிடைத்த அனுபவம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவியாக இருந்தது. கிடைத்த வாய்ப்புகளில் முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறேன்.

"மதுரை பையன், சென்னை பொண்ணு" வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்தேன். அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க பல முறை தேர்வாகி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனால் தொடர் முயற்சி செய்து தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.

"ரசவாதி" படத்தின் மூலம் அர்ஜீன் தாஸ், சுஜித் சங்கர் ஆகிய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இவர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. சுஜித்துடன் நடித்த போது சற்று அச்சத்துடன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இயக்குனர் சாந்த குமார் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சி.

எனக்கு பரதநாட்டியம் தெரியாது. ஆனால் படத்தில் வரும் பாடலில் பரதநாட்டியம் இருந்தது. அதற்காக படத்தின் பாடலையே போட்டு பயிற்சி எடுத்து போது அது தான் பாடல் என்பது எனக்கு தெரியாது. பாடல்வரிகள் இல்லாமல் கதாபாத்திரம், காதலர்கள் குறித்து "தாய் தாய்"பாடல் எளிதாக எடுத்துரைக்கிறது.

சாலா, சுடரி உட்பட மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். ரசவாதி எனது நான்காவது படம். ஆனால் "ரசவாதி" முதலில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக. 23ல் "சாலா" திரைப்படம் வெளியாகிறது. இந்த ஆண்டிலேயே நான்கு திரைப்படங்களும் வெளிவரும்.

ரசவாதி படத்திற்கு பின்பு உடல் எடையில் 10 கிலோ குறைத்துள்ளேன். நடைப்பயிற்சி, உணவு கட்டுபாட்டை கடைபிடித்து வருகிறேன்.

"மவுன ராகம்" போன்ற காதல் கதையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும். தற்போது வரை கதையை கேட்டு அழுத்தமான கதாபாத்திரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே நடித்து வருகிறேன்.

பெற்றோரின் ஆதரவோடு முழு திறமையை வெளிப்படுத்தினால் சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் வெல்ல முடியும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட

மேலும் படிக்க

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

மேலும் படிக்க

ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map