சிறப்புச்செய்திகள்:

பிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட சுஜாதா

பிளாஷ்பேக்: தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட சுஜாதா
Advertisement
எழுத்து அளவு


தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுஜாதா. ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. நேராக படப்பிடிப்புக்கு வருவார், யாருடனும் பேச மாட்டார். தனது கேரக்டரை உள்வாங்கி நடித்து விட்டு பிறகு தனிமையில் சென்று அமர்ந்து கொள்வார். பொது விழாக்களிலோ, அவர் படம் சம்பந்தப்பட்ட நிகழ்விலோ பங்கேற்க மாட்டார். அதற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது. சிவாஜி மறைந்தபோது அவரது இறுதி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுதான் பொது நிகழ்வு.

இலங்கையில் பிறந்த சுஜாதா வளர்ந்தது கேரளாவில். சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக 1971ம் ஆண்டு "தபஷ்வினி" என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் சுஜாதாவை தமிழுக்கு அழைத்து வந்தார் கே.பாலச்சந்தர்.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்தியா முழுக்க வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. 1990ம் ஆண்டிற்குப் பிறகு திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். யார் யாருக்கெல்லாம் ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் "வரலாறு". தெலுங்கில் "ஸ்ரீ ராமதாசு". 2011ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

புரியாத புதிராகவே வாழ்ந்த சுஜாதாவுக்கு இன்று 72வது பிறந்த நாள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம்

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம்

மேலும் படிக்க

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தோழியான பாடகி

மேலும் படிக்க

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map