சிறப்புச்செய்திகள்:

இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் வாரிசு?

இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் வாரிசு?
Advertisement
எழுத்து அளவு

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் "வாரிசு" படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. படத்தின் எடிட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படத்தின் நீளம் இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த நீளத்தைத்தான் படத்தின் இயக்குனர் வம்சி இறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இரண்டே முக்கால் மணி நேரப் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு நீண்ட நேரம் இழுப்பது போல் இருக்கும் என்ற பேச்சு எப்போதுமே உண்டு. ஆனால், இந்த 2022ல் வெளிவந்து அதிக வசூலைப் பிடித்த "பொன்னியின் செல்வன்" படம் 2 மணி நேரம் 47 நிமிடங்களும், "விக்ரம்" படம் 2 மணி நேரம் 53 நிமிடங்களும் நீளம் கொண்ட படங்கள்தான். படம் நன்றாக இருந்தால் படத்தின் நீளம் பற்றி ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிலும் விஜய் படம் என்பதால் படத்தின் நீளத்தை ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்களே தவிர அதைக் குறையாக நினைக்க மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

இதனிடையே, இன்று இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று

மேலும் படிக்க

கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா

கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா

திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் படம் “தாழ் திறவா”. பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இந்த படம், மாறுபட்ட களத்தில் உருவாகும்

மேலும் படிக்க

ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா

ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொதினேனி முதல்முறையாக கதை எழுதி ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தை அவரின் ரெப்போ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து,

மேலும் படிக்க

நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்?

நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்?

தமிழில் பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தவிர தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் படங்களும் தயாரிக்கிறார். சினிமாவில்

மேலும் படிக்க

‛இம்மார்ட்டல் படப்பிடிப்பு நிறைவு

‛இம்மார்ட்டல் படப்பிடிப்பு நிறைவு

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் இம்மார்ட்டல். இதில் டி.எம்.கார்த்திக், லொல்லு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map