ராமாயணா : வரி விலக்கு அளித்த மேற்கு வங்க முதல்வர் | ஓடிடியில் வெளியான பிறகு தமிழில் திரையரங்குகளில் வெளியாகும் பார்வதியின் படம் | காமெடி கதாபாத்திரத்தில் 'ஜெயிலர்' வில்லன் நடித்துள்ள படம் நாளை ரிலீஸ் | ஜெயிலர் 2 : வெளிநாட்டு வசூல் 20 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏஆர் ரஹ்மான் இசையில் பாடிய தேவிஸ்ரீ பிரசாத், ஜிவி பிரகாஷ், அனிருத் | தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் 'எல்லம்மா' : அடுத்தாண்டு மார்ச் 5ல் ரிலீஸ் | தங்கள் குழந்தைக்கு தேவி என்று பெயர் வைத்த ரன்வீர், தீபிகா | ‛அதிசய பிறவி' : ரஜினி பட தலைப்பில் சந்தானம் | விபீஷணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் : ராமாயணா மூலம் பாலிவுட்டில் என்ட்ரி | ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ் |

பிக்பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த எட்டு சீசனையுமே மோகன்லால் தான் தொகுத்து வழங்குகிறார். அப்படி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் உடல் ரீதியான மோதல்களில் ஈடுபட்ட சந்தோஷ் ராஜ் என்கிற தாஷி, மோகன்லால் இடம் இந்த வார கண்டனத்திற்கு ஆளானார்.
இனிமேல் அவரை தாஷி என்று யாரும் அழைக்க வேண்டாம் அதற்கு பதிலாக அவர் பெயரில் உள்ள சந்தோஷ் என்றே கூப்பிடுங்கள் என மோகன்லால் வேடிக்கையாக சொன்னார். ஆனாலும் சந்தோஷிற்கான தண்டனையாக அவரை மூன்று வாரம் தொடர்ந்து நேரடி எவிக்சன் நாமினேஷனில் வைத்தார். இது பிக்பாஸ் வரலாற்றில் புதிய விஷயம். இப்படி அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களை மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனிவரும் நாட்களில் பார்க்க முடியும் என தெரிகிறது.