டாக்சிக் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் : 3 மணி 14 நிமிடங்கள் நீளம்…. | சுதந்திர தின வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்கள்...! | கல்யாண வீடு பின்னணியில் இரண்டு சினிமா நிகழ்ச்சிகள் | காதல் முட்டாள் ஆக்குதா? சாதனையாளர் ஆக்குதா? | 'ஆர்.ஆர்.ஆர்' பட பாடகர் மீது இளம்பெண் புகாரின் பேரில் வழக்குப்பதிவு | பஹத் பாசில் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ராஜமவுலி | செல்போனை அதிகம் பயன்படுத்தியதால் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை ஷகீலா | அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகும் 'இருளன்' | நரியாக இருப்பதை விட நாயாக இருக்கவே விரும்புகிறேன் ; கங்கனா ரணாவத் | சினிமாவில் 67 ஆண்டுகள்: கமல்ஹாசன் நன்றி |

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா 'கிங் ஆப் கிங்ஸ்' என்ற பெயரில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் நடப்பதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி முன் ஏற்பாடுகளுக்காக கோவை சென்ற கார்த்திக்ராஜா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இதனை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் இடம் பெறும், அப்பா இளையராஜாவின் பாடல்களுகளும் இடம் பெறும். 4 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன், அதையே மேடையில் பயன்படுத்த இருக்கிறேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்த இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். எனது பட பாடல்களையும் பாட உள்ளேன் என்றார்.




