இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் புகார் |

தற்போது அஜித் குமார் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தான் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ''விஜய்யை பொருத்தவரை படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போன்றுதான் அஜித்குமாரும் படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து பேசியதில்லை. யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட தான் அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.




