பொருத்தமானவர் இன்னும் தென்படவில்லை : திருமணம் குறித்து நித்யா மேனன் பதில் | ரீ ரிலீஸில் வசூலை குவித்த சனம் தேரி கசம் - ஹீரோவுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர். | வினித் சீனிவாசனின் சடங்கு படப்பிடிப்பு நிறைவு | மகனின் படத்திற்கு அப்பா பேச, அப்பாவின் படத்திற்கு மகன் பேச… வித்தியாச வீடியோ | மம்முட்டி, மோகன்லால் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் தற்கொலை | அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதீர்கள் : எதிர்மறை விமர்சனங்களுக்கு சல்மான் கான் பதில் | ரஜினியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்த ராஷி கண்ணா | தனுஷ் ஒரு அசாதாரணமான கலைஞர் : அமிதாப் பச்சனின் சமீபத்திய பாராட்டு | இந்திய நடிகர்களில் புதிய சாதனை படைத்த யஷ் | ‛அரசன்'-ல் அனிருத் விலகலா : தயாரிப்பாளர் தாணு பதில் |

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் முன்னணியில் வரத் தடுமாறும் நடிகர்களில் சிபிராஜும் ஒருவர். அவர் கதாநாயகனாக அறிமுகமாகி 22 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்கத் தடுமாறி வருகிறார். ஆனால், அவரது அப்பா சத்யராஜ் 70 வயதிலும், தமிழ் சினிமாவில் கடந்த 47 வருடங்களாக ஒரு நிலையான இடத்தில் உள்ளார். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சிபிராஜ் நடித்து கடைசியாக 2022ம் ஆண்டு 'வட்டம்' என்ற படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்பு தியேட்டர்களில் வெளிவந்த 'மாயோன்' படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.
2014ல் வெளிவந்த 'நாய்கள் ஜாக்கிரதை', 2016ல் வெளிவந்த 'ஜாக்சன் துரை' ஆகியவைதான் கடந்த பத்து வருடங்களில் சிபியின் வெற்றிப் படங்கள். அதன்பின் வந்த ஐந்தாறு படங்கள் குறிப்பிடும்படியாக அமையவில்லை.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வாரம் அவர் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகிறது. படம் நன்றாக வந்திருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப் பிறகாவது இடைவெளி விடாமல் சிபிராஜ் நடித்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கலாம்.




