ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த 'அகாடமி ஆப் அச்சீவ்மென்ட்' விருது | ஆஸ்கர் விருது குழுவில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் | பிளாஷ்பேக்: 'சிவாஜி' என்ற திரைக்கலைஞனை அடையாளம் கண்ட தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் | விசித்திரமான நோயால் அவதிப்படும் விஷ்ணு விஷால் | குடும்பமாக இணைந்து கலக்கிய 'பிளாஸ்ட்' முதல் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்? | மக்களை சிரிக்க வைக்கும் பணி கடினமானது : அக்ஷய் குமார் | சிறிய விஷயங்கள் : நடிகர் சங்க பிரச்சனை குறித்து மம்முட்டி கருத்து | மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு | சிலிர்க்க வைக்கும் தினமலர் சினிமா வாட்ஸ் அப் சேனலில் இணைந்திடுங்கள்: 'ஹாட் டிரெண்டிங் அப்டேட்ஸ்'-ஐ ரசியுங்கள்!! | இளம் நடிகைகள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள் ; அக்ஷய் குமார் வருத்தம் |

தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக ஜொலித்தவர் மோகன். பொறியியல் படித்த அவர் ஆரம்பத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். என்றாலும் நாடகத்தின் மீதுதான் அவருக்கு ஈர்ப்பு. மற்றவர்களின் நாடகத்தில் நடித்தவர், பின்னர் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இது பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் சினிமாவுக்கென்று ஒரு கதை எழுதுமாறு சொன்னார். அதுதான் 'பொய்கால் குதிரை'. நாடகமும், படமும் ஹிட்டானதால் 'யாருப்பா இந்த மோகன்' என்று கேட்க அப்போது நிறைய மோகன்கள் இருந்ததால் 'கிரேஸி மோகன்' என்றார்கள். அதுவே அவரது பெயராக மாறியது.
அவரது நாடகங்களில் அவரது தம்பி பாலாஜி நடித்தார். நாடகத்தில் அவரது பெயர் மாது. கிரேஸி மோகன் இயக்கிய எல்லா நாடகத்தின் நாயகன் பெயரும் மாதுதான். அதுதான் பாலாஜி, 'மாது பாலாஜி' ஆனார். பின்னர் கமல்ஹாசன் அழைத்து 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு வசனம் எழுத சொன்னார். அவர் எழுதிய வசனங்கள் பெரிய ஹிட். கமல் அவரை தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
கே.பாலச்சந்தர், கமல் படங்கள் அல்லாது வேறு பல படங்களுக்கும் வசனம் எழுதினார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் நாடகத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். கருணாநிதி, இளங்கோவன், ஆரூர்தாஸ், ஸ்ரீதர், பாலமுருகன், பாலசந்தர், பாக்யராஜ், சுஜாதா, ஏ.எல்.நாராயணன், பாலகுமாரன் வரிசையில் கிரேஸி மோகனுக்கும் இடம் உண்டு.
அண்மையில் நடந்த கிரேஸி மோகன் விழாவில் கமல் பேசியபோது குறிப்பிட்டார். 'எல்லோரும் செத்த பிறகு சொர்க்கத்துக்கு போக விரும்புவார்கள், ஆனால் மோகன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்ந்தவர்' என்றார். இன்று கிரேஸி மோகனின் 6வது நினைவு நாள்.




