‛மூக்குத்தி அம்மன் 2' டிரைலர் வெளியீடு | சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம் | அதை 8வது டேக்குல வந்து சொல்றீங்க பாருங்க.. பக்ஸை கலாய்த்த ரஜினிகாந்த் | ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் | துப்பாக்கிச்சூடு: டைகர் ஷெராப்-க்கு முன்பு சல்மான்கான்தான் முதல் இலக்காம்! | 'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்! | சூர்யாவை இயக்கும் ராம் சரண் பட இயக்குனர்! | கனடாவில் உள்ள யார்க் சினிமாஸில் 'ஜெயிலர்-2' காட்சிகள் ரத்து! | மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் : சசிகுமார் | இளம் வயதிலேயே வயதான கேரக்டர்களில் நடித்த தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் |

பார்த்திபன், இயக்கி, நடித்த முதல் படம் 'புதிய பாதை'. புதிய பாதை கதையை எழுதிவிட்டு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது சுந்தரம் என்ற பத்திரிகையாளர்தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். 40 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டு 38 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க ரஜினியைத்தான் நினைத்திருந்தார் பார்த்திபன். ஆனால் அப்போது ரஜினியின் சம்பளமே 50 லட்சத்திற்கு மேல் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு தானே நடித்தார். குஷ்புதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது வீட்டுக்கு சென்று கதை சொன்னார். கதை குஷ்புவிற்கு மிகவும் பிடித்து நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பிறகு படத்தின் சில டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். ஆனால் அவரது வசன உச்சரிப்பில் இந்தி வாசனை இருந்தது. அதோடு அவரது தோற்றமும் வடஇந்திய பெண்ணாக இருந்ததால் அவரை நிராகரித்தார்.
பிறகுதான் சீதாவை தேர்வு செய்தார். சீதாவை கண்டதுமே காதல் கொண்டார். இதனால் படத்தில் தனது கேரக்டர் பெயரையே சீத்தாராமன் என்று மாற்றினார். பின்னர் காதலித்து திருமணமும் செய்தார்.




