பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

2022ல் ‛லெஜெண்ட்' என்ற படத்தில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். ஜே.டி. ஜெர்ரி அந்த படத்தை இயக்கியிருந்தார்கள். அதன் பிறகு அவரது நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி திரைக்கு வந்த படம் ‛லீடர்'. துரை செந்தில்குமார் இயக்கிய இப்படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் ஷ்யாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தியிருந்தார் லெஜெண்ட் சரவணன்.
இந்த படம் மே ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்து இருக்கிறது. இந்த லீடர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.




