சூர்யா படத்துடன் மோதும் ‛ஹாய்' | அதிர்ஷ்டம் இல்லாத நடிகையா : பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த பதிலடி | ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓ சுகுமாரி | ரூ.50 கோடி வசூலில் 'கட்டா குஸ்தி 2' | ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை | அமரன் படத்தில் மிஸ்சிங் ராமாயணாவில் கிடைக்குமா? | ஆகஸ்ட் மாதம் தொடங்குமா அஜித் படம்? | தமிழில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் கன்னட நடிகை | யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார் அனுபமா பரமேஸ்வரன் : விடுதலையாகி விட்டதாக திடீர் பதிவு | ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் தமிழ் படம் |

1990ம் ஆண்டு வெளிவந்த 'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். இயற்பெயர் வைஜயந்தி. தாய் மொழி தெலுங்கு. ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள பெத்தாபுரத்தைச் சார்ந்தவர். பாலுமகேந்திராவின் “ராமன் அப்துல்லா” படத்தின் மூலம் புகழ்பெற்றார். குரு பார்வை, சிம்மராசி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அப்பு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்கள்.
தென்னிந்திய சினிமாவில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஈஸ்வராவ் 28 வருட இடைவெளிக்குப்பின் 'காலா' படத்தில் ரஜனிகாந்த் மனைவியாக நடித்தார். பாலுமகேந்திரா இயக்கிய 'நீங்கள் கேட்டவை' படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க ஈஸ்வரி ராவை முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அது பல காரணங்களால் நடைபெறவில்லை.
எப்படியாவது ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பல நேர்காணல்களில் ஈஸ்வரிராவ் கூறி வந்தார். அவரது விருப்பம் 'காலா' படத்தில் மூலம் நிறைவடைந்தது. இதில் அவர் ரஜினி மனைவியாக நடித்தார். சிறந்த குணசித்ர நடிகைக்கான பல விருதுகளையும் அவருக்கு இந்த படம் பெற்றுத் தந்தது.




