வசூலுக்குத் தொடர்பு இல்லாத 'டிரைலர் வியூஸ்கள்' | விரும்பிய வாழ்க்கையை கொடுத்த ‛ஜெயிலர்' : மிர்ணா நெகிழ்ச்சி | புத்தம் புது நிகழ்ச்சிகள், படங்களுடன் சோனி விழா ஒளிபரப்பை தொடங்கியது | இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் : ஜீவா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : 4 மொழியில் ரீமேக் செய்யப்பட்ட பிரபு படம் | 'நந்தா, மெளனம் பேசியதே' பட தயாரிப்பாளரின் அடுத்த படம் | பிளாஷ்பேக் : பணத்தோட்டம் படத்தில் 18 மணி நேரம் நடித்த சரோஜாதேவி | 'மண்டாடி, பத்தா, மீசையமுறுக்கு 2, டோரதி, மொத ராத்திரி' பட வசூலுக்கு செக் வைத்த 'ஜெயிலர் 2' | பெத்லகேம் குடும்ப யூனிட் : பாராட்டிப் பதிவிட்ட கேரள முதல்வர் | ராமாயணா : வரி விலக்கு அளித்த மேற்கு வங்க முதல்வர் |

தமிழில் தகராறு, வீர சிவாஜி, தேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயகன். இவர் புதிதாக இயக்கி உள்ள படம் ‛அருள்வான்'. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இப்போது ஜூலை 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கிராமிய பின்னணியில் பீல் குட் படமாக தயாராகி உள்ளது.
அருள்நிதி நடிப்பில் இதற்கு முன் ‛ராம்போ' என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‛டிமான்டி காலனி 3' படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் சூழலில் அதற்கு முன்னதாகவே ‛அருள்வான்' படம் ரிலீஸாக உள்ளது.