‛கிளாடியேட்டர்ஸ்' டிரைலர் வெளியீடு ; தோல்வியை பார்த்து அஜித் பயந்தது இல்லை : ஷாலினி | சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் | தெலுங்கு ரசிகர்களின் முதல் தேர்வாகத் தொடரும் சூரியின் மண்டாடி | சந்தீப் கிஷன் திறமை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை : ஜேசன் சஞ்சய் | கரீனா கபூர், பிருத்விராஜ் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் சுமாரான தொடக்கம் | நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில் | ஜெயிலர் 2வில் திலீப்பாக சுராஜ் வெஞ்சாரமூடு | பூரி ஜெகன்நாதர் கோயிலில் கிடைத்த சமுத்திரக்கனி படத்தலைப்பு | ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம் | எப்போதும் பரிதாபத்துக்குரியவர்கள்... என்ன செய்யலாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை? |

சினிமா பிரபலங்கள் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது காலம் காலமாக நடந்து வருகிறது. காதல், கல்யாணம், விவாகரத்து என அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை ஹிந்தி நடிகரான அமீர்கான் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது 'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதாநாயகி தெலுங்கு நடிகை ஸ்வாதி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். 'மத் ஆப் மது' படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் நகோடி என்பவருடன் நடந்த திருமணம் குறித்து இன்ஸ்டா தளத்தில் இருவரும் இணைந்து பதிவிட்டுள்ளனர்.
2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்ற பைலட் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். தனது கணவருடனான திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் அவர் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார்.
நேற்று (ஜுலை 8) ஸ்வாதிக்கும், ஸ்ரீகாந்த் நகோடிக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.





