சமந்தாவிற்கு ஆண் குழந்தை : பெயரையும் அறிவித்தார் | பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! |

சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'மாத்ருபூமி'. முதலில் இந்தப் படத்திற்கு 'பேட்டில் ஆப் கல்வான்' என தலைப்பு வைக்கப்பட்டு, பின்னர் 'மாத்ருபூமி' என மாற்றப்பட்டது. கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை அபூர்வ லகியா இயக்கியுள்ளார். இந்தப் படம் சென்சார் சிக்கலில் சிக்கி இருப்பதாகவும், அதனால் இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை, 2027-ல் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களாக சில செய்திகள் வெளியாகின.
ஆனால் இன்னும் படம் சென்சாருக்கே அனுப்பப்படவில்லை என்றும், இவை அனைத்தும் வதந்தியே என்றும் படக்குழுவினர் மறுத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், தற்போது இந்த 2026-லேயே இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது என்பதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் இயக்குநர் அபூர்வ லகியாவின் பெயர் விடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, அந்த இடத்தில் இயக்குநரின் பெயருக்குப் பதிலாக 'எ பிலிம் பை சல்மான்கான் பிலிம்ஸ்'' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநருக்கும் சல்மான்கானுக்கும் இடையே ஏதாவது பிரச்னையா என்பது குறித்து தற்போது பாலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.