கோவையில் ராம் சரணுக்கு ஆபரேஷன் நிறைவு | தனுஷ் 56வது பட அப்டேட் தந்த தமிழரசன் பச்சமுத்து! | இவர் படம்னா இது இல்லாமலா? : தமிழ் சினிமாவிற்கு தனி அடையாளம் தந்த டைரக்டர்கள் | ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி கட்டு' ஆக.,21ல் ரிலீஸ் | சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் | ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு : பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு | சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம் | மும்பை பாந்த்ராவில் பூஜா ஹெக்டே கட்டிய பிரமாண்ட வீடு! | ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்! | கே.ஜி.எப் நாயகனுடன் இணைந்து நடிக்க ஆர்வத்தில் இருக்கும் ரன்பீர் கபூர்! |

சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தரும் வகையில் இந்தவாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வெளியாகவுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம்...
கான் சிட்டி (Con City)
புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரை ராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கான் சிட்டி'. இந்த திரைப்படம் இன்று (ஜூலை 24ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கேஸ் ஆப் கொண்டனா (Case of Kondana)
கன்னட இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கேஸ் ஆப் கொண்டனா. இந்த படத்தில் விஜய் ராகவேந்திரா, பாவனா மேனன், குஷி ரவி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் நேற்று (ஜூலை 23ம் தேதி) ஈடி வின் தளத்தில் வெளியாகியுள்ளது.
முசாபிர் கபே (Musafir Cafe)
பாலிவுட் நடிகர்கள் விக்ராந்த் மாஸே மற்றும் மஹிமா மக்வானா நடித்துள்ள வெப் தொடர் முசாபிர் கபே. அமைதியான வாழ்க்கை வாழும் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைந்த பிறகு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான மாற்றங்களே கதையாகச் சொல்லப்படுகிறது. இந்த தொடர் இன்று (ஜூலை 24ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியானது.
ஈகோ ராமன் (Ego Raman)
இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர், சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஈகோ ராமன்'. இந்த படம் இன்று (ஜூலை 24ம் தேதி) அமேசான் ப்ரைம் மற்றும் சிம்பிளி சவுத் தளத்தில் வெளியாகி உள்ளது.
பள்ளிச்சட்டம்பி (Pallichattambi)
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி. இந்த படம் இன்று (ஜூலை 24ம் தேதி) சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது.
சீக்ரெட் ஆப் காலிங்கா (Secret of Kalinga)
மலையாள இயக்குநர் சனீஷ் உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் அல்தாப் சலீம் நடிப்பில் வெளியான படம் 'சீக்ரெட் ஆப் காலிங்கா'. இந்த படம் இன்று சன் நெக்ஸ்ட்டில் வெளியாகி உள்ளது.
டிரிப்பிள் டெக்கர் (Triple Decker)
மலையாள இயக்குநர் கிருஷ்ணனுன்னி மங்கலத் இயக்கத்தில், அகில் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிரிப்பிள் டெக்கர். இந்த படம் இன்று (ஜூலை 24ம் தேதி) மனோரமா மேக்ஸில் வெளியானது.




