‛மூக்குத்தி அம்மன் 2' டிரைலர் வெளியீடு | சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம் | அதை 8வது டேக்குல வந்து சொல்றீங்க பாருங்க.. பக்ஸை கலாய்த்த ரஜினிகாந்த் | ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் | துப்பாக்கிச்சூடு: டைகர் ஷெராப்-க்கு முன்பு சல்மான்கான்தான் முதல் இலக்காம்! | 'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்! | சூர்யாவை இயக்கும் ராம் சரண் பட இயக்குனர்! | கனடாவில் உள்ள யார்க் சினிமாஸில் 'ஜெயிலர்-2' காட்சிகள் ரத்து! | மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் : சசிகுமார் | இளம் வயதிலேயே வயதான கேரக்டர்களில் நடித்த தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் என முன்பே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அந்த படத்தை முடித்துவிட்டு 'தர்மன்' படத்துக்கு சென்றுவிட்டார் ரஜினிகாந்த். பாடல் வெளியீட்டுவிழா, விளம்பர நிகழ்ச்சிகள், போஸ்ட் புரொடக்ஷன் என 'ஜெயிலர் 2' படக்குழுவும் பிஸியாக இருக்கிறது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அக்டோபர் 15க்கு பதில் நவம்பர் 5ல் வெளியாகலாம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அக்டோபர் 15ல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் புது தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நவம்பர் 8ம் தேதி தீபாவளி என்பதால் அதை குறி வைத்து நவம்பர் 5ல் ரிலீஸ் செய்தால் இன்னும் வசூலை அள்ள வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.




