டிசி 100 கோடி வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்' | சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி | பறந்து போனது ‛புதிய பறவை' : சவுகார் ஜானகியின் திரை வாழ்க்கை | பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார் | ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷன் | இப்படியும் ஒரு கூத்து : ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் தவறாக வெளியான ஹாலிவுட் படம் | படத்தின் ரிலீஸ் தேதியையே டைட்டிலாக்கிய இயக்குனர் | ஓட்டலில் சக பாடகியுடன் நெருக்கம் : மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய நாட்டுப்புற பாடகர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான் |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். ஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கிறார்.
கடந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி அவரது இசையில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் 'மகுடம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. இதில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தெலுங்குப் படமான 'இருமுடி' படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான முதல் காட்சி வரவேற்பு அமோகமாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வரவேற்பு குறித்து அனிருத் ஸ்டைலில் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் ஜிவி. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொண்டாடத் தயாராகிவிட்டார்.