பிறக்கப் போகும் குழந்தைக்கு ரசிகர் சொன்ன பெயரால் இம்ப்ரஸ் ஆன சமந்தா | கீது மோகன்தாஸ் எடுத்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை : பார்வதி நழுவல் பேச்சு | சினிமாவுக்குள் எடுக்கப்பட்ட குறும்படத்தை யுடியூபில் வெளியிட்ட பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு | அஜய் தேவ்கனின் தமால் 4 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜேசன் சஞ்சய் ஹீரோவாகியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார் : சந்தீப் கிஷன் | மண்டாடி என் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் : சுஹாஸ் | எனக்கும் பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை... : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் | தாமதமாகும் விஜய் சேதுபதியின் 2 படங்களின் ரிலீஸ் அறிவிப்பு | 'டிஸாஸ்டர்' தோல்வியை நோக்கி 'டாக்சிக்' | நஷ்டத்திலிருந்து தப்பித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' |

1980 மற்றும் 90களில் வெளியான கமர்ஷியல் படங்களில் காபரே டான்ஸ் இடம் பெற்றிருக்கும். அனுராதா, டிஸ்கோ சாந்தி, சிஐடி சகுந்தலா, மாயா, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி என இதற்கென தனியான நடிகைகள் இருந்தார்கள். காபரே டான்ஸ் என்பது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மதுக்கூடங்களில் நடத்தப்படும் ஒரு கவர்ச்சி நடனமாகும். மது அருந்தும் ஆண்களின் காம இச்சையை தூண்டும் வகையில் அவர்கள் அருகே சென்று ஆடும் நடனம். இது ஹாலிவுட் படங்களில் இடம் பெற்று வந்தது.
இதனை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் வைஜயந்தி மாலா என்றால் நம்ப முடிகிறதா. அவருக்கு முன்னர் சில படங்களில் சிறிய அளவில் இது இடம் பெற்றிருந்தாலும் வைஜயந்திமாலா ஆடிய பிறகுதான் இது புகழ்பெற்றது.
1964ம் ஆண்டு வெளியான ஹிந்திப் படமான 'சங்கம்' படத்தை ராஜ் கபூர் இயக்கி நடித்தார், அவருக்கு ஜோடியாக நடித்த வைஜெயந்தி மாலா படத்தின் நடன இயக்குநராகவும் பணியாற்றினார். அந்த படத்தில் இடம் பெற்ற 'மைன் கியா கரூன் ராம்' என்ற பாடல் பாடலில் காபரே நடனம் ஆடி நடித்தார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, விமர்சிக்கப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகள் அந்த நடனம் ஆட்சி செய்தது.




