லண்டன் கார் ரேஸை துவக்கி வைத்த முதல்வர் விஜய் : ஆரத்தழுவி வரவேற்ற நடிகர் அஜித் | அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா | ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | அதிர்ச்சி கொடுத்த அக்ஷய் குமாரின் ஹைவான் | ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன் | ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள் | விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ் |

2026ம் வருடத்தின் 8வது மாதமான ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதியான இன்று “அமரம், ஹாய், ஒன்ஸ்மோர்,” ஆகிய மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகிறது.
'அமரம்' என்ற தலைப்பில் ஏற்கெனவே மம்முட்டி நடித்த மலையாளப் படம் 1991ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 'ஹாய்' என்ற பெயரில் இதற்கு முன்பு எந்த ஒரு படமும் இந்தியாவில் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. ஆனால், 'ஓ…ஹாய்' என்ற பெயரில் ஹாலிவுட்டில் கடந்த வருடம் ஒரு படம் வெளியாகி இருக்கிறது.
'ஒன்ஸ்மோர்' என்ற தலைப்பில் 2018ல் ஒரு மராத்தி படம் வெளியாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக 1997ல் இப்போதைய தமிழக முதல்வரான விஜய் மற்றும் சிவாஜி கணேசன், சிம்ரன், சரோஜாதேவி நடித்த ஒரு படம் வெளியாகி இருக்கிறது.
சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரே பெயரில் ஒரு படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பழைய படங்களின் பெயர்களுடன் புதிய படங்கள் வருவது வழக்கமான ஒன்றுதான்.
இந்த வருடத்தில் இதற்கு முன்பாக, 'பராசக்தி, யூத், மகுடம்' ஆகிய படங்கள் பழைய படப் பெயர்களுடன் வெளிவந்துள்ளன.




