சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு | சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் |

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படமான 'சிக்மா', அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் ஆந்திரா - தெலுங்கானா போன்ற பல பகுதிகளில் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் ஜேசன் சஞ்சய். அவருடன் படத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற சிக்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்றுள்ளார். அப்போது அப்படத்தை பற்றிய சில பாசிட்டிவானா விஷயங்களை பேசி சிக்மா படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
இந்த நிகழ்ச்சியில், சிரஞ்சீவியுடன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது முதல் படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக்கிவிட வேண்டும் என்பதற்காக, பெரிய அளவில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ஜேசன் சஞ்சய்.
அதோடு, தமிழகத்தில் நடைபெறும் சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனது தந்தையான முதல்வர் விஜய் பங்கேற்காத போதும், அவரது பெயரை மேடைகளில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார் ஜேசன் சஞ்சய். இதன் மூலம் சிக்மா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியது.




