Advertisement

சிறப்புச்செய்திகள்

ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனரிடம் நடிகர் அர்ஜூன் புகார் | அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஐ ஆம் கேம்' தோல்வி ஏன்? : துல்கர் சல்மான் விளக்கம்

08 அக், 2026 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Why-I-Am-Game-Failure,-Dulquer-Salmaan-explained
Advertisement

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக இருப்பவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 2023ல் வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படத்திற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த 'ஐ ஆம் கேம்' படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் 50 கோடி வசூலைக் கூட நெருங்கவில்லை என்பது தகவல்.

நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்தார் துல்கர். அப்போது ஒரு ரசிகர் 'ஐ ஆம் கேம்' படத்தின் தோல்வி குறித்து கேட்டதற்கு, “சில சமயங்களில், நம் தரப்பில் நாம் அனைத்தையும் சரியாகச் செய்தாலும், வெளிப்புறக் காரணிகளோ அல்லது பிற சூழல்களோ அந்த விஷயங்களையே தலைகீழாக மாற்றிவிடக்கூடும்.

ஒரு திரைப்படத்தின் இறுதி முடிவை அல்லது வெளியீட்டைப் பகுப்பாய்வு செய்வது எளிது. ஆனால் ஒரு படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை தேவைப்படுகிறார்கள். இது ஒருபோதும் எளிதானதோ அல்லது சாதாரணமானதோ அல்ல. இதற்கென தனியாக சூத்திரங்களையோ அல்லது கல்விசார் கோட்பாடுகளையோ பயன்படுத்தவும் முடியாது.

உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ வேண்டுமென்றே தவறுகளையோ அல்லது மோசமான படத்தையோ உருவாக்க நினைப்பதில்லை. நிஜ வாழ்க்கையிலேயே எல்லாமே நாம் நினைத்தபடியா நடந்திருக்கின்றன ? அப்படியிருக்க, ஒரு உள்வட்டக் குழு மற்றும் பல வெளிப்புறக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பை (திரைப்படத் தயாரிப்பை) நினைத்துப் பாருங்கள்.

நான் எப்போதும் என் குழுவிற்குத் துணையாக நிற்பேன்; யாரையாவது குறை சொல்ல விரும்பினால், நீங்கள் என்னைக் குறை சொல்லலாம்,” என்று பதிலளித்துள்ளார்.

2023ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'சீதா ராமம்' வெற்றிக்குப் பின்பு துல்கர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா, ஐ ஆம் கேம்' ஆகிய படங்களும், தமிழில் நடித்து வெளிவந்த 'காந்தா' படமும் தோல்வியைத் தழுவியது. 2024ல் வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானா படேகர் மறைவு : பிரதமர் மோடி, ரஜினி, திரையுலகினர் இரங்கல்நானா படேகர் மறைவு : பிரதமர் மோடி, ... ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'மண்டாடி' ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap