Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா திரிஷா?

14 அக், 2026 - 04:15 IST
எழுத்தின் அளவு:
Is-Trisha-taking-a-plunge-into-acting
Advertisement


நடிகை திரிஷா சமீபகாலமாகச் செய்திகளில் பெரிதும் அடிபடவில்லை. உடனடியாகத் திரைக்கு வரவிருக்கும் படங்கள் எதுவும் இல்லாததால், அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் அமைதியாக இருந்து வருகிறார். மேலும், முதல்வர் விஜய் தொடர்பான அரசியல் சர்ச்சைகளிலிருந்தும் அவர் விலகியே உள்ளார்.

விஜய்யுடன் இணைத்து பரவிய வதந்திகளைக் தொடர்ந்து, ஊடகங்களின் பார்வையில் படாமல் வேண்டுமென்றே திரிஷா தவிர்த்து வருவதாக செய்திகள் பரவின. மேலும், இந்த அரசியல் சூழலில் அதிகப்படியான விவாதங்களைத் தவிர்க்க அவர் நடிப்பைவிட்டே விலக முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

ஆனால் இதுகுறித்து திரிஷா தரப்பில் விசாரித்தால் மறுக்கிறார்கள். நடிப்பிலிருந்து விலகும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். புதிய படங்களில் ஒப்பந்தமாகத் அவர் தயாராகவே இருப்பதாகவும், ஊடகங்களைச் சந்திப்பதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதோடு, அரசியலுக்கு வருவதில் திரிஷாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் கூறுகிறார்கள். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்துள்ள 'விஸ்வாம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள 'ராம்' ஆகிய படங்கள் திரைக்கு வர தாமதமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி!ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' ... விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் கல்யாண்? விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap