‛அதிசய பிறவி' : ரஜினி பட தலைப்பில் சந்தானம் | விபீஷணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் : ராமாயணா மூலம் பாலிவுட்டில் என்ட்ரி | ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ் | சிரஞ்சீவி படத்தில் இணைந்த கபீர் துகான் சிங் | ராஷ்மிகாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா | இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ஜெயிலர் 2 | மறைந்த தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல் | 'ராமாயணா' படத்தில் சின்ன சின்ன விஎப்எக்ஸ் குறைகளை கண்டுக்காதீங்க: யஷ் பேச்சால் சலசலப்பு | 'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | ஜெயிலர் 3க்கு இப்போதே கதை எழுதும் ரசிகர்கள் : வெளியாகும் ரீல்ஸ்கள் |

ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில் இன்று (அக்.,15) உலகம் முழுவதும் ரிலீசானது 'ஜெயிலர் 2'. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர்.
கூடுதலாக எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், நமோ நாராயணா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள், டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்தது.
அந்த வகையில் இன்று ரிலீசான 'ஜெயிலர் 2' படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முந்தைய ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 'ஜெயிலர் 2' படம் அதனை முறியடிக்குமா என்பது வரவேற்பை பொறுத்து தெரியவரும்.