‛அதிசய பிறவி' : ரஜினி பட தலைப்பில் சந்தானம் | விபீஷணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் : ராமாயணா மூலம் பாலிவுட்டில் என்ட்ரி | ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ் | சிரஞ்சீவி படத்தில் இணைந்த கபீர் துகான் சிங் | ராஷ்மிகாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா | இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ஜெயிலர் 2 | மறைந்த தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல் | 'ராமாயணா' படத்தில் சின்ன சின்ன விஎப்எக்ஸ் குறைகளை கண்டுக்காதீங்க: யஷ் பேச்சால் சலசலப்பு | 'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | ஜெயிலர் 3க்கு இப்போதே கதை எழுதும் ரசிகர்கள் : வெளியாகும் ரீல்ஸ்கள் |

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா', தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய டிக்கெட் புக்கிங் தளங்களிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நவம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது.
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மொத்தம் 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளததாக தகவல்.
ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நேற்று ராமாயணா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடந்துள்ளது. சென்னையில் நாளை ராமாயணா ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடக்கிறது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படத்தின் வசூலை அதிகரிக்க வேண்டும். படத்துக்கு அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மொழிகளிலும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.