பார் மகளே பார், கேப்டன் பிரபாகரன், கேங்கர்ஸ், கூலி : ஞாயிறு திரைப்படங்கள் | அடுத்தடுத்த அரசியல் நகர்வு... : 3000 மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கும் தனுஷ் | பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் ‛செப்' தாமு காலமானார் | அருள்நிதியின் ‛வேட்ட சாமி' படம் டிசம்பரில் வெளியாகிறது | ராமாயணா இரண்டாம் பாகம் 2028-க்கு தள்ளிவைக்கப்பட்டதா? | பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின | முதல் பாடலிலேயே சாதனையை துவங்கிய தமிழ் சினிமாக்கள் | செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ' | சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு : டிசம்பரில் ரிலீஸ் | சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார் |

பொதுவாக ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பொதுவாக, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோ நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகிறது.
இத்தகைய நடைமுறைக்கு மாறாக, 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்', 'ஆதார்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் 'திண்டுக்கல் சாரதி' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்'சென்சார்' என்ற படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிடுகிறார் ராம்நாத்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில், திரையில் நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே நாம் பெரும்பாலும் திரைக்கதையைக் கொண்டாடுகிறோம். 'சென்சார்' திரைப்படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், கதையை அதன் அசல் வடிவத்தில் வாசகர்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திரையில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, அது உருவான எழுத்து உலகத்திற்குள் வாசகர்கள் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இது வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமல்ல; தமிழ் சினிமாவில் எழுத்துக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆகும் என்றார்.