இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் புகார் |

தமிழ் சினிமாவில் 'ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ்' ஆகிய இரண்டே இரண்டு படங்களை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. ஆனால், அந்த இரண்டு படங்களுக்காகவுமே மாறுபட்ட இயக்குனர் என்று ரசிகர்களால் பாராட்டுக்களைப் பெற்றவர்.
அவரது மூன்றாவது படமாக 'பாக்கெட் நாவல்' படத்தின் அறிவிப்பு வந்ததுமே ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். அதற்கு இசையமைப்பாளர் இளையராஜா என்பதும் கூடுதல் சிறப்பாக இருந்தது.
முதல் இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை, மூன்றாவது படத்திற்கு இளையராஜாவுடன் தியாகராஜன் இணைவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. ஆனால், கடந்த சில வாரங்களாக அப்படத்திலிருந்து இளையராஜா விலகிவிட்டார், அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல்கள் வர ஆரம்பித்தது.
இந்நிலையில் படக்குழுவினர் இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பை, ஒரு வீடியோவுடன் நேற்று வெளியிட்டனர். அதில், “இனி, இது வெறும் வதந்தி அல்ல' எனக் குறிப்பிட்டு ஜிவி பிரகாஷ்குமார் படத்தின் இசையமைப்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இளையராஜாவுக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் என்ற தகவல் வந்த போது இருந்த பரபரப்பு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு இல்லாமல் போனது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் இளையராஜா, யுவன் இந்தப் படத்திற்கு இல்லாமல் போனது வருத்தம் என பலரும் பதிவிட்டுள்ளார்கள்.




