தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த 'சீன்' | சென்னை தெருவிற்கு தேவா பெயர் : அமைச்சரிடம் ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை | ஏமாற்றியதாக பெண் புகார் : பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு | இசையமைப்பாளர் பரணி மகன் திருவாசகன் ஹீரோவாக அறிமுகமாகிறார் | அவஞ்சர்ஸ் - டூம்ஸ்டே : அடுத்த மாதப் படத்திற்கு இப்போதே ஹவுஸ்புல் புக்கிங் | தெலுங்கில் உருவாகும் இரண்டு 'ஹனுமான்' படங்கள் : தயாரிப்பாளர் ஒரு பக்கம், இயக்குனர் வேறொரு பக்கம் | இளையராஜா, கமல்ஹாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தமிழ்நாட்டில் வெளியாகும் மலேசிய தமிழ் படம் | 'யுனஸ்கோ காந்தி' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம் | ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு 'டோரதி' தேர்வு |

நடிகர் சர்வானந்த் தெலுங்கில் இளம் நடிகராக வலம் வருகிறார். தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டுகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் 'போகி' என்கிற படத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ள இதை சம்பத் நந்தி இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்கள். அதற்கேற்றபடி இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் அறிவித்திருந்தார்கள்.
ஆனால் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இந்தப் படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியபோது அவர்கள் இதனை 'ரிவைசிங் கமிட்டி'க்கு அனுப்பி வைத்துள்ளதால், திட்டமிட்டபடி படத்தை நவம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியாது என்பதாலேயே புரமோஷன் நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டார்கள். மேலும் பிரச்சினைகள் முடிந்த பிறகு படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது..




