பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு |

தனது 7 வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த ஸ்ரீநிஷா, 'அவன் இவன்' படத்தில் இடம் பெற்ற 'ஒரு மலையோரம்' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்போது உடன் பாடிய சாம் விஷாலை காதலித்தார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இசையால் இணைந்திருந்த இருவரும் தற்போது வாழ்க்கையிலும் இணைகிறார்கள். இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் (நவ.,11) சென்னையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. பாரம்பரிய உடையணிந்து இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், இவர்களின் திருமணத் தேதி முடிவாகவில்லை.




