இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது | 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்? | 'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! | அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு! | மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன் | பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பஹத் பாசில்! | ரணபாலி படத்தின் 130 நாள் படப்பிடிப்பு நிறைவு | ஸ்ரீதேவியின் சென்னை சொத்து பிரச்சனை : மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | மகனுக்கு வழிவிட்ட தந்தை | அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது |

கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, அதை அவரிடமே போட்டுக் காட்டி பாராட்டு பெற்றுள்ளார் நடிகர் விவேக்.
இதுப்பற்றி விவேக் கூறுகையில், "என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திற்காக அவர் இசை அமைத்த இதழில் கதை எழுதும் நேரமிது... பாடல். ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன். அவரிடம் உரையாடிய போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டேன் என்று கூறி நான் வாசித்த இதழில் கதை எழுதும் நேரமிது... காணொளியை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்."
நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும், அடுத்த சந்ததியினரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன். அதற்கு அவர் தன்னுடைய புகைப்படத்தில் இறையருள் நிறைக” என்று எழுதி கையெழுத்திட்டு தந்துள்ளார். இதை எனது பியானோவில் விரைவில் பதித்து, அதை இசைஞானி முதன் முதலில் வாசிக்க வேண்டும். அவரும் வாசித்து என்னை ஆசிர்வதிப்பதாய் கூறியுள்ளார்” என்றார்.