Advertisement

சிறப்புச்செய்திகள்

டெலிகிராமிற்கு மீண்டும் ‛செக்' வைத்த மத்திய அரசு | சோனி லிவ் ஓடிடி தளத்துடன் புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா | எனது குரு பாக்யராஜை இழந்து தவிக்கிறேன் : பார்த்திபன் உருக்கமான பதிவு | ராம் சரணின் பெத்தி ஓடிடி வெளியீடு இதோ... | முதல்நாளே பாக்ஸ் ஆபீஸில் ‛டல்' அடித்த ஆலியா பட்டின் ஆல்பா | ‛குஸ்தி' கற்றால் தன்னம்பிக்கை வரும் : ஐஸ்வர்ய லட்சுமி | ராதிகா, லியோ சிவக்குமார் கூட்டணியில் ‛டெலிவரி பாய்' : டீசர் வெளியானது | முதல்வர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்'-க்கு ‛ஏ' சான்றிதழ் : தணிக்கை விபரம் வெளியானது | 'தர்மன்' ஸ்டைலிசான படம் : இயக்குனர் சொல்கிறார் | மீண்டு(ம்) வருகிறார் சக்தி வாசு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கேஜிஎப் 2' - பெரும் நம்பிக்கையுடன் இயக்குனர் பிரஷாந்த் நீல்

06 ஜூன், 2021 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Prashanth-neel-trust-about-KGF-2
Advertisement

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அவற்றிலும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் தயாரித்து முடிக்கப்பட்டு இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியாகி உலக சாதனையையும் படைத்தது. 190 மில்லியன் வரவேற்பை இதுவரை பெற்றுள்ளது. படத்தை அடுத்த மாதம் 16ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். தற்போதைய கொரோனா சூழலில் அதே தேதியில் வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரியும்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் பற்றி பிரஷாந்த் கூறுகையில், “உலகமே இந்த கொரோனா தொற்றால் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் மற்றவர்களைப் போலவே நம்மையும், நமது குடும்பத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் தொற்று நம்மையும் தாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் மக்களை நாம் எப்படி தியேட்டர்களுக்கு வாருங்கள் என்று கேட்க முடியும். நமது வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டு வருடத்தை அழித்துவிட வேண்டும் அல்லது பாசிட்டிவ்வாக நினைத்தால் இதை ஒரு பிரேக் என எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேஜிஎப் 2 படம் எப்போது வெளிவந்தாலும் அது மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். படத்தின் கதை உலகத்துக்கே பொருத்தமான ஒன்று. ஒரு பீரியட் படமாக இருந்தாலும், இப்போதைய சூழலுக்கு ஏற்ற கதையாக இல்லாமல் இருந்தாலும், அது எப்போது வெளியானாலும் தானாகவே பிரஷ்ஷாக பீல் செய்ய வைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

படத்திற்கான வியாபாரம் அனைத்து மொழிகளிலும் எதிர்பார்த்த விதத்தை விட அதிகமாகவே நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை 'கேஜிஎப் 2' முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகினரிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பஞ்சதந்திரம் 2' : கமல்ஹாசன் முடிவெடுப்பாரா ?'பஞ்சதந்திரம் 2' : கமல்ஹாசன் ... காளிதாஸ் - தன்யாவை இயக்கும் கிருத்திகா உதயநிதி காளிதாஸ் - தன்யாவை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap