Advertisement

சிறப்புச்செய்திகள்

அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா | ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | அதிர்ச்சி கொடுத்த அக்ஷய் குமாரின் ஹைவான் | ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன் | ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள் | விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ் | வீரபாகு முதல் கைப்புள்ள வரை... : வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வீரபாகு முதல் கைப்புள்ள வரை... : வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் பிறந்தநாள் ஸ்பெஷல்

12 செப், 2026 - 03:42 IST
எழுத்தின் அளவு:
From-Veerabahu-to-Handicapped...-Vadivelus-Birthday-Special
Advertisement

நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மதுரையில் பிறந்த வடிவேலு, கஸ்துாரிராஜா இயக்கத்தில், ராஜ்கிரண் நடிப்பில் 1991ல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் பிரபலமானர். அதற்கு முன்பே சில படங்களில் சின்ன, சின்ன கேரக்டரில் நடித்து இருக்கிறார். டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி படத்தில் கூட வடிவேலு வருவார்.

மதுரையில் எளிய குடும்பத்தில் பிறந்தவர், ஆரம்பத்தில் பஸ்சுக்கு பிரேம்போடும் கண்ணாடி அறுக்கிற வேலை செய்து இருக்கிறார். சினிமா ஆர்வத்தில் மதுரையில் இருந்து லாரியில் சென்னை வந்து கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் ராஜ்கிரண் ஆபீசில் உதவியாளராக இருந்து இருக்கிறார். பல அவமானங்கள், புறக்கணிப்புகளை தொடர்ந்து சினிமாவில் ஜெயித்து நகைச்சுவை நடிகராக, கதைநாயகனாக, பாடகராக மாறினார். 1991 தொடங்கி இன்று வரை 300 படங்களில் வடிவேலு நடித்து இருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்து இருக்கிறார். அப்படி அவர் நடித்த முக்கியமான சில கேரக்டர்களை பற்றி பார்ப்போம்...

1) கைப்புள்ள - வின்னர்

சுந்தர்.சி இயக்கிய இந்த படத்தில் வடிவேலு கெட்அப், நடிப்பு, வசனங்களை பார்த்து சிரிக்காதவர்கள் கிடையாது. குறிப்பாக, அவருக்கும், ரியாஸ்கானுக்குமான சீன்கள் வெடிச் சிரிப்பை வரவழைக்கும். பிரசாந்த், வடிவேலு, கிரண் இணைந்து நடித்த சீன்களிலும் காமெடி செட்டானது.

2) புலிகேசி - இம்சை அரசன் 23ம் புலிகேசி

தமிழில் எத்தனையோ அரசர் சம்பந்தப்பட்ட கதைகள் வந்து இருக்கின்றன. ஒரு காமெடி, பில்டப் ராஜாவின் கதையை சொன்னது, சிம்புதேவன் இயக்கிய இந்த படம். இம்சை அரசனாக வடிவேலு செய்கிற இம்சையும், பணியாளர்களை, புலவர்களை அவர் படுத்தும்பாடு இருக்கிறதே அப்பப்பா. வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற பட டயலாக் மாதிரி, இந்த படமும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான நகைச்சுவை படம்.

3) வீரபாகு - கிரி

சுந்தர்.சி இயக்கிய இந்த படத்தில் அக்கா வைத்து பேக்கரி வாங்கிய காமெடியும், எவ்வளவு அடிச்சாலும் நீ ரொம்ப நல்லவன்னு சொல்றான் என வடிவேலு அழுகிற காமெடியும் எவர்கிரீன். பட், அந்த டீலிங் எனக்கு பிடித்தது என வடிவேலு சொல்ல, அர்ஜூன் எகிற தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும்.

4) சுடலை - வெற்றிக்கொடிகட்டு

இன்றைக்கும் துபாய் என்றால் அந்த நாட்டில் பிரமாண்டம் நினைவுக்கு வரும், அப்புறம் சேரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் வடிவேலுவின் துபாய் காமெடி நினைவுக்கு வரும். துபாய் ரிட்டர்ன் ஆக வடிவேலும், கிராமத்துகாரராக பார்த்திபனும் இணைந்து அதகளம் பண்ணியிருப்பார்கள். முதலில் பார்த்திபனை வடிவேலு துரத்த, பின்னர் அவர் வடிவேலுவை துரத்த ஒரே அமர்களம்தான்.

5) என்கவுன்டர் ஏகாம்பரம் - மருதமலை

சுராஜ் இயக்கிய படம். இப்படிப்பட்ட போலீசை எந்த சினிமாவிலும் காண்பித்தது இல்லை. அதிலும், வடிவேலுவும், போண்டா மணியும் மார்க்கெட்டில் மாமூல், பிச்சை எடுக்கிற சீன், அர்ஜூன், வடிவேலு செல்ல சண்டையை எப்போது பார்த்தாலும் மனசு லேசாகும்


6) நேசமணி - ப்ரண்ட்ஸ்

சித்திக் இயக்கத்தில் வடிவேலு நடித்த நேசமணி கேரக்டர். இப்போதும் சோஷியல் மீடியாவில் பிரபலம். சமீபத்தில் கூட அந்த கேரக்டர் வைரலானது. ஒரு பங்களாவில் சூர்யா, விஜய், ரமேஷ் கண்ணா, சார்லியை கூட்டிக்கொண்டு அவர் பெயிண்ட் அடிக்கப்போவதும், அங்கே நடக்கிற கூத்தும் செம.

7) அய்யாசாமி - சச்சின்

இன்றைக்கு முதல்வராக இருக்கும் விஜயும், வடிவேலும் இணைந்து கலக்கிய படங்களில் ஒன்று. கல்லுாரி, காதல் காட்சிகளில், விஜய் உடனான மோதல்களில் வடிவேலு முத்திரை பதித்து இருப்பார்.

8) அழகு - சுந்தரா டிராவல்ஸ்

தாஹா இயக்கிய இந்த படத்தில் பஸ் கிளினர் வடிவேலுக்கும், அந்த எலிக்கும் நடக்கிற சண்டை, பஸ் காமெடி, மாப்பிள்ளை அழைப்பு காமெடிக்கு சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. முரளி, வடிவேலு கூட்டணியில் வெற்றி பெற்ற சிறந்த நகைச்சுவை படம்.

9) படித்துறை பாண்டி - கருப்பசாமி குத்தகைதாரர்

மூர்த்தி இயக்கி இந்த படத்தில் பந்தாகார மதுரைக்காரராக வாழ்ந்து இருந்தார் வடிவேலு. அவர் மாமூல் வசூலிக்கும் ஸ்டைல், பிரச்னை வந்தால் ஓடும் பாணி, பங்காளிகளுடன் சேர்ந்து போடும் திட்டமும் இதெல்லாம் தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி சீன்கள்.

10) வண்டு முருகன் - எல்லாம் அவன் செயல்

பொதுவாக வக்கீல் என்றால் சினிமாவில் சீரியஸ் ஆன கேரக்டராக காண்பிப்பார்கள். அதை வடிவேலு உடைத்த படம். வண்டு முருகனாக அவர் கோர்ட்டில் அடிக்கும் காமெடி, தவிக்கும் இடங்கள், ஜெயிலுக்கு போய் மூக்கை உடைக்கும் இடங்கள் பிரமாதம்.

11) நாய் சேகர் - தலைநகரம்

திரிஷா இல்லன்னா நயன்தாரா, நான் ஜெயிக்கு போறேன் போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் இடம் பெற்ற படம். சுராஜ் இயக்கிய இந்த படம் வடிவேலு காமெடிக்காகவே ஓடியது எனலாம். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காமெடிகள் இடம் பெற்ற படம்.

12) பிச்சுமணி - அரசு

சுரேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்த இந்த படத்தில் முதலில் அப்பாவி கோயில் பணியாளராக, பி்ன்னர், அரசு பணியாளராக மாறுவார் வடிவேலு. கோயில் ஹிந்திகார குடும்பத்தில் அவர் பேசுவது, அரசு வேலை கிடைத்தவுடன் அலப்பறை பண்ணுவது கலக்கல்.

13) ஸ்னேக் பாபு - ஆர்யா

பாலசேகரன் இயக்கிய இந்த படத்தில் பிச்சைகாரனாக இருக்கும் வடிவேலு கவுன்சிலர் ஆகிறார். கெட்அப்பிலும் மாற்றம் இருக்கும். ஸ்னேக்பாபு என அடிக்கடி டயலாக் சொல்லிக் கொண்டு அவர் அடிக்கிற லுாட்டி அருமையாக இருக்கும்.

14) செல்லப்பா - குண்டக்க மண்டக்க

பார்த்திபனுடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் மற்றும் டிராபிக் சிக்னல் காமெடி போன்ற சீன்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒரு சின்ன திருடன் எப்படி இருப்பான் என்பதை காமெடியாக நடித்து காண்பித்தார்.

15) வடிவு - பாட்டாளி

பெண் வேடத்தில் வடிவேலு நடித்த படம். அவருக்கும் கிரேன் மனோகருக்குமான காதல் காட்சிகள், வடிவேலுவின் பெண் கெட் அப், அந்த டயலாக் டெலிவரி படத்துக்கு பிளஸ் ஆக அமைந்தது.

16) கருப்பட்டி அய்யாக்கண்ணு - எம்மகன்

நாசரின் மச்சனாக வருவார் வடிவேலு. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்ற புகழ் பெற்ற டயலாக் இடம் பெற்றது இந்த படத்தில்தான். தனது தந்தை மறைந்தவுடன் லேட்டாக வரும் வடிவேலு சுடுகாட்டில் புலம்புவதும், பின்னர் அலறி அடித்து ஓடுவதும் மறக்க முடியாதகாட்சி.

17) சேகர் - காலம் மாறிப்போச்சு

வி.சேகர் இயக்கிய இந்த படத்தில் கோவை சரளா கணவராக வடிவேலு வாங்கும் அடிகளை ரசிப்பதற்கே தனி கூட்டம் இருந்தது. இன்றும் அந்த அடிவாங்கும் காமெடிகளை டிவியில், போனில் பார்த்து ரசிப்பவர்கள் அதிகம்.

18) ஸ்டீவ் வாக் - மனதை திருடிவிட்டாய்

பிரபுதேவா, வடிவேலு நடிப்பில் நாராயணமூர்த்தி இயக்கத்தில் வந்த இந்த படத்தில் வடிவேலு பாடல், அந்த கெட்அப், வசனங்களுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. இன்றைக்கும் டிவியில் அதிகம் ஒளிபரப்பப்படும் காமெடிகளில் இதுவும் ஒன்று.

19) குழந்தைவேலு - மிடில்கிளாஸ் மாதவன்

ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என வடிவேலு பேசும் டயலாக் இன்றும் பிரபலம். காலையில் நல்லவன், மாலையில் குடிகாரன் என அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருந்தார். டி.பி.கஜேந்திரன் இயக்கிய இந்த படத்தில் வடிவேலுவின் ஆட்டோ டிரைவர் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது

20) சூனா பானா - கண்ணாத்தாள்


பாரதி கண்ணன் இயக்கிய இந்த படத்தில் சூனா பானா என்ற சுப்பையா பாண்டியனாக வருவார் வடிவேலு. அந்த ஆடு திருடும் காட்சி, அடுத்து நடக்கும் பஞ்சாயத்து, அதில் வடிவேலு செய்யும் அலப்பறை, விஷம் குடிக்கும் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்

முத்திரை பதித்த மற்ற படங்கள்

இந்த கேரக்டர் தவிர ‛சுறா', 'சின்னகவுண்டர்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'சிங்காரவேலன்', 'தேவர் மகன்', 'கிழக்கு சீமையிலே', 'மிஸ்டர் ரோமியோ', 'லவ் பேர்ட்ஸ்', ‛ராசையா', 'கங்கா கௌரி', 'பாரதி கண்ணம்மா', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'விரலுக்கேத்த வீக்கம்', 'முதல்வன்', 'வண்ணத்தமிழ் பாட்டு', 'கந்தா கடம்பா கதிர்வேலா', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'பாட்டாளி', ‛சந்திரமுகி', 'மாயி', 'என் புருஷன் குழந்தை மாதிரி', 'லூட்டி', 'தவசி', 'காமராசு', 'பகவதி', 'நைனா', 'வசீகரா', , 'ஏய்', 'தாஸ்', ' 'சாணக்கியா', 'இங்கிலிஷ்காரன்', 'லண்டன்', ' 'திமிரு', 'கோவை பிரதர்ஸ்', 'ரெண்டு', 'சீனா தானா 001', 'போக்கிரி', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு', 'குசேலன்', ' 'வெடிகுண்டு முருகேசன்', 'அழகர் மழை', 'ஆதவன்', 'கச்சேரி ஆரம்பம்', 'தில்லாலங்கடி', 'நகரம்', 'காவலன்', 'மம்முட்டியன்', 'மறுபடியும் ஒரு காதல்'.'வெற்றிக்கொடிகட்டு', 'தவசி', 'காத்தவராயன்' உள்ளிட்ட படங்களிலும் காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் வடிவேலு.

கதைநாயகனாக நடித்த படங்கள்

சிம்புதேவவன் இயக்கிய, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி', தம்பி ராமையா இயக்கிய 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', எலி, கேங்கர்ஸ், மாமன்னன், தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் கதைநாயனாக நடித்திருக்கிறார். விரைவில் அவர் நடிப்பில் பேங்பேங், மார்ஷல், போர் முழக்கம் படங்கள் வர உள்ளன.

பாடிய பாடல்கள்

'எட்டணா இருந்தா' (எல்லாமே என் ராசாதான்), 'சிரிப்பு வருது சிரிப்பு வருது' (வெற்றி கொடுக் கட்டு), 'ஊனம் ஊனம்' (பொற்காலம்), 'போடா போடா புண்ணாக்கு' (என் ராசாவின் மனசிலே), 'வாடி பொட்ட புள்ள வெளியே' (காலம் மாறிபோச்சு), 'ஆடிவா பாடி வா' (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), 'கட்டுனா அவளை கட்டுனும்டா' (ஜெயசூர்யா), 'விக்கலு விக்கலு' (பகவதி), 'ஏக் தோ தீனுடா' (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), 'மதுரக்கார விவேக்கு' (லூட்டி), 'நாலு அடி ஆறு' (என் புருஷன் குழந்தை மாதிரி) ஆகிய பாடல்களும் வடிவேலுவை சிறந்த பாடகராக காண்பித்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நெக்ஸ்ட்… ரெஸ்ட்... : என்னது இந்த இயக்குநர்கள் படம் இல்லாம இருக்காங்களா?நெக்ஸ்ட்… ரெஸ்ட்... : என்னது இந்த ... லண்டன் கார் ரேஸை இன்று துவக்கி வைக்கும் முதல்வர் விஜய் : அஜித் நெகிழ்ச்சி கலந்த வாழ்த்து லண்டன் கார் ரேஸை இன்று துவக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap