காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

பாலிவுட்டின் இரண்டு முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான அமீர்கானின் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து புதிய மைக்ரோ டிராமா தளத்தைத் தொடங்க உள்ளன.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குறுகிய வடிவ மொபைல் பொழுதுபோக்கு சந்தையில் நுழையும் வகையில் இந்த தளம் துவங்கப்படுகிறது. ஒரிஜினல் படைப்புகள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளிகளுடனான பிரத்யேக கூட்டணிகள் ஆகியவை பயன்படுத்தப்படும். மொபைல் போனில் பார்ப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்படும் மைக்ரோ டிராமாக்கள், மிகக் குறுகிய நேரத்தில் விறுவிறுப்பான கதைகளைப் பார்த்து ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்காக இவை பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன.
இதன்மூலம், இத்தளத்திற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் படைப்புகளுடன், முன்னணி டிஜிட்டல் கலைஞர்களையும் அவர்களது ரசிகர் பட்டாளத்தையும் இத்தளத்திற்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தளம் குறித்த கூடுதல் விவரங்கள், தொடக்க விழா மற்றும் வெளியாகவுள்ள படைப்புகளின் பட்டியல் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.