''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி | பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம் | தமிழில் ஏன் தலைப்பு இல்லை : தங்கர்பச்சான் ஆதங்கம் | 20 ஆண்டுகள் 124 படங்கள் : ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி | இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மம்முட்டி படங்கள் | இரண்டே மாதத்தில் பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு நிறைவு | 'மாத்ருபூமி' படக்குழுவிற்கு சுவிஸ் கடிகாரங்களைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சல்மான் கான் | சாத்விகா வீரவல்லி : முதல் படம் வருவதற்கு முன்பே 4 படங்களில் ஒப்பந்தம் | ரோஜாவின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் |

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி என்கிற நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷன் நடிகை பவித்ரா கவுடாவுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்துவதாக விமர்சித்தார். பவித்ரா கவுடாவை மிக கடுமையாக ஆபாசமாக பேசினார். ரேணுகாசாமி கொல்லப்பட்ட வழக்கில் தர்ஷனும், பவித்ரா கவுடாவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.
கொலை வழக்கு பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், பவித்ரா கவுடா ஜாமீன் கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது உடல் நிலை சரியில்லை என்றும் தனது மகனின் படிப்புக்கு உதவ வேண்டும் என்றும் அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். ஜாமீனில் வெளியிட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையில் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படும் பிரகாஷ் என்பவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்.




