பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் |

தமிழ் சினிமா உலகில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் இயக்குனர் ராஜா, ஜெயம் ரவி. அண்ணன், தம்பிகளான இவர்கள் பல படங்களுக்கு எடிட்டிராகப் பணியாற்றிய மோகனின் மகன்கள் ஆவர். அண்ணன், தம்பி இருவரும் இணைந்து சில வெற்றிப் படங்களைத் தமிழில் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜா பின்னர் தன் பெயருடன் அப்பா மோகன் பெயரைச் சேர்த்துக் கொண்டு மோகன் ராஜா ஆகிவிட்டார். சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற ராஜா தெலுங்குப் படமான 'அனுமன் ஜங்ஷன்' மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு எட்டு தமிழ்ப் படங்களை இயக்கி முடித்த ராஜா மீண்டும் இயக்கிய தெலுங்குப் படமான 'காட்பாதர்' சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்களது மகன்களில் இரண்டு படங்களின் போஸ்டர்கள் முன்பும் நின்று கொண்டு அவர்களது பெற்றோர் மோகன், வரலட்சுமி ஆகியோர் புகைப்படும் எடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'பெருமையான பெற்றோர்' என மோகன்ராஜா பதிவு செய்துள்ளார். அதை ஜெயம் ரவியும் ரிடுவீட் செய்துள்ளார்.




