பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரமும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் தொடர்கிறது.
தமிழகத்தைத் தவிர வெளிநாடுகளில் அமெரிக்காவில் தான் இந்தப் படம் அதிக வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான கடந்த வார இறுதி நாட்களில் மட்டுமே இப்படம் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அள்ளியது. இப்போது 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் வசூலாகும் தொகையுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தின் அமெரிக்க வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான வசூலை அமெரிக்காவில் மட்டும் பெற்றுவிடும். அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விடவும் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.




