அடுத்தடுத்து அசத்தல் பாடல்கள் தந்த, இளையராஜா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி | பிளாஷ்பேக் : தொடர்ந்து 72 மணி நேரம் நடித்த ரஜினி | பிளாஷ்பேக் : கதை உரிமை பிரச்னையில் சிக்கிய ‛நெஞ்சில் ஓர் ஆலயம்' | குறைவான படங்களில் நடிப்பது ஏன்? : அதிதி விளக்கம் | ஒரிஜினல் மான்ஸ்டர் : சிவராஜ்குமாரின் புதிய படம் அறிவிப்பு | மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது : கைரா வாசுதேவன் | நான் உயிரோடு இருக்கிறேன் : வதந்திக்கு செப் தாமு முற்றுப்புள்ளி | உடைகளை வைத்து தரத்தை நிர்ணயிக்காதீர்கள்; நடிகைகளுக்கு எல்லை தெரியும்: ரைசா காட்டம் | எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் ராஷ்மிகா | 'டாக்சிக்' இயக்குனரை விடாமல் டார்ச்சர் செய்யும் மம்முட்டி பட இயக்குனர் |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அமிதாப் பச்சன், பஹத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் அமிதாப்பச்சன் அவரது கதாபாத்திரத்திற்கு அவரே குரல் கொடுத்துள்ளார். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பதிப்புகளில் அமிதாப்பச்சன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன் குரல் போன்ற நம்பகத்தன்மைக்கு சற்று ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனராம்.




