பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்த பார்த்திபன் | பிளாஷ்பேக் : சத்தமின்றி சாதனை படைத்த இலங்கை இசை அமைப்பாளர் | ராமாயணா பாடல் சர்ச்சை : ஏஆர் ரஹ்மான் விளக்கம் | திடீர் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன் | ஜீவாவின் 49வது படம் தொடங்கியது | யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' நவ., 27ல் ரிலீஸ் | ஆபாச ஏஐ வீடியோ : அருவருப்பான செயல் என நடிகை சுனைனா கண்டனம் | 'கந்தன் கருணை' முதல் 'சிந்து பைரவி' வரை: சிவகுமார் நடிப்பில் பிரபலமான படங்கள் | ‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று! | இப்படியொரு வேடத்தில் நடித்தது இல்லை : 'கேஜிஎப்' ஸ்ரீநிதி ஷெட்டி |

தமிழகம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினர்களாக இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் சிலருடன் புதிதாக சிலரும் போட்டியாளர்களாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அஞ்சலி நாயர், ட்வென்டி 20 என்கிற கட்சியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து திருப்பணித்துறா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கான பிரச்சாரத்தை கடந்து சில நாட்களாக அவர் மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சலி நாயர் மலையாளத்தில் பல படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வந்தார். தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக ஒரு சில காட்சிகளின் நடித்திருந்தார். அது மட்டுமல்ல சித்தா படத்திலும் நடித்தவர் இவர்தான். இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி சட்டசபைக்குள் நுழைவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.