மிர்ணாவின் சிறு வயது 'க்ரஷ்' ஹிருத்திக் ரோஷன் | ஒரு வார வசூல் : லியோ Vs ஜெயிலர் 2 | கல்கி 2 படப்பிடிப்புக்கு திரும்பினார் பிரபாஸ் | ரன்பீர் கபூருக்கும் மிரட்டல் | ருக்மணி வசந்த் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு | பாரதிராஜாவின் கடைசி படமான ‛புலவர்' அக்., 30ல் ரிலீஸ் | வெளியீட்டுக்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக வெளியிடும் இயக்குனர் | எனது ஹிந்தி உச்சரிப்பை கிண்டல் செய்வது முட்டாள்தனம் : ராஷ்மிகா மந்தனா | சுங்கத்துறை அதிகாரி இயக்கிய படத்தில் நடித்த ராதிகா | ராமாயணத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் : ஏ.ஆர் ரஹ்மான் |

'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து 'தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட்' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.




