சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்றழைக்கப்படுபவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் இறங்குவதற்கு முன்பு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதற்காக வந்தவர், பின்னர் இயக்குனராக மாறிவிட்டார்.
அவருக்குத் தற்போது ஒரு முக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அது நடக்குமா நடக்காதா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட சிபி சக்கரவர்த்தி அவர் எழுதிய கதைக்கு, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் இயக்குனர் ஷங்கர் என சொல்லி இருக்கிறார். அவரிடமும் கதை சொல்லப்பட்டு அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.
இந்நிலையில் படத்தின் திரைக்கதை விஷயத்தில் ரஜினிக்கும், சிபிக்கும் இடையே கருத்து மோதல் வந்துள்ளது. அதனால், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் அப்படத்திற்குத் திரைக்கதை எழுதி வருகிறாராம். இரண்டில் எது தேர்வாகிறதோ அதுதான் படமாகும் என்கிறார்கள். அப்படி அஸ்வத் எழுதிய திரைக்கதை தேர்வானால் சிபி இந்தப் படத்திலிருந்து விலகுவார் என்கிறார்கள்.
சிபி எழுதிய திரைக்கதையில்தான் ஷங்கர் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். அஸ்வத் அவரது திரைக்கதையில் மாற்றியிருந்தால் அது நடக்காது என்று சொல்லப்படுகிறது. எது நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




