கனவிலும் நினைக்கவில்லை : கவின் நெகிழ்ச்சி | ‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு : பாடலின் முழு லிரிக் இதோ... | மூக்குத்தி அம்மன் 2வில் வில்லியாக ரெஜினா | ஹாய் பட டிரைலருக்கு வரவேற்பு | டூப் நடிகர் இல்லாமல் நடிக்கும் சல்மான்கான் | டாக்சிக் முன்பதிவிற்கு வரவேற்பு | சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய், கமல் இரங்கல் | டிசி 100 கோடி வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்' | சிரமத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு, சீரிய நடிப்பால் உயர்ந்த 'காவியத் தலைவி' நடிகை சவுகார் ஜானகி |

நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியை காதலித்து வருகிறார். அவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் கெனிஷா தன்னைப் பற்றி பேசவும், சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஆர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீதிமன்றம், ஆர்த்தி ரவிக்கு எதிராக சமூக வலைதளங்கள் அல்லது பொதுவெளியில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்யவோ, பேசவோ கெனிஷாவுக்கு தடை விதித்துள்ளது. அதோடு கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான அவதூறு கருத்துக்கள் மற்றும் ஆர்த்தி ரவிக்கு எதிரான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டது.