Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா?

26 மே, 2026 - 05:11 IST
எழுத்தின் அளவு:
Flashback-Do-you-know-the-director-who-made-Rajinikanth-the-hero
Advertisement


வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை ஹீரோவாக்கிய படம் 'பைரவி' என்பதும், அதனை தயாரித்தவர் கலைஞானம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அந்தப் படத்தை இயக்கிய பாஸ்கரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. பாஸ்கர். எஸ் ஏ சந்திரசேகரை போன்று சட்டப் பிரச்னைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர்.

இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்தவர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பாஸ்கர் இயக்கிய முதல் படம் ‛இன்னும் ஒரு மீரா'. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ‛பைரவி'. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பைரவி மட்டுமே இன்னொருவரின் கதை மற்ற படங்கள் அனைத்தும் பாஸ்கரின் சொந்தக் கதை.

ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் பெற்றவர் பாஸ்கர்.

படம் பெரிய வெற்றி பெற்றது. அதை தயாரித்து கலைஞானம் மற்றும் விநியோகித்த எஸ் தானு ஆகியோரின் பெயர்கள்தான் பெரிய அளவில் பேசப்பட்டது; பாஸ்கரை பற்றி யாரும் பேசவில்லை. 1980ல் பாஸ்கர், ஆஸ்கார் மூவிஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 'சூலம்', 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' படங்களை இயக்கினார். இதில் தீர்ப்புகள் திருத்தப்படலாம் வெள்ளிவிழா கண்டது. இதன் பிறகு 'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்', 'பௌர்ணமி அலைகள்', 'பன்னீர் நதிகள்' சட்டத்தின் திறப்பு விழா ஆகிய படங்களை இயக்கினார். இதுவும் வெற்றிப் படங்களே.

மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். ‛விஷ்ணு', ‛காதல் ரோஜாவே', ‛தோட்டா' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். 2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : எங்கே மோகனா?பிளாஷ்பேக் : எங்கே மோகனா? ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap