Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்?

02 ஜூன், 2026 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-173-Director-changed-again
Advertisement


கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 173வது படத்தின் இயக்குனர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. கடந்த வருடம் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக நவம்பர் 6ம் தேதி இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

அதன் பின் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவித்தார்கள். அதோடு படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். அப்படி வெளியாவதாக இருந்தால் இந்நேரம் படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதனால், 2027 பொங்கலுக்கு வருவதும் சந்தேகம்தான்.

இதனிடையே, இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக ஒரு செய்தி பரவியுள்ளது. 'ஓ மை கடவுளே, டிராகன்' ஆகிய படங்களை இதற்கு முன்பு இவர் இயக்கியுள்ளார்.

இன்று அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ், அஸ்வத் மாரிமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதனால், ரஜினிகாந்த் 173 படத்தை அஸ்வத் இயக்குவது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா?'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் ... பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap