Advertisement

சிறப்புச்செய்திகள்

காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெப் தொடரில் மிதிலா பால்கர்

22 ஜூன், 2026 - 03:54 IST
எழுத்தின் அளவு:
Mithila-Palkar-in-a-web-series
Advertisement

மராட்டிய சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக இருப்பவர் மிதிலா பால்கர். 'மஜா ஹனிமூன்' என்ற மராட்டிய குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். அடிப்படையில் பாடகியான இவர் மராட்டிய மொழியின் அடையாளமான ‛கப்' பாடல் மூலம் பிரபலமானார். நம்ம ஊரு கானா பாடல் மாதிரி இந்த பாடல். மிதிலாவின் கப் பாடல் யு-டியூபில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியது. போர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் 30 வயதிற்குட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றார். 2020ம் ஆண்டில், 35 வயதுக்குட்பட்ட 'இந்தியாவின் தொழில்முனைவோர் 35' என்ற பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.

இந்தி, மராட்டி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வந்த மிதிலா தமிழில் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் நாயகியாக நடித்தார். இதில் அவர் விஷ்ணு விஷாலின் தம்பி ராகுல் ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் மராட்டிய சினிமாவிற்கே திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது 'சூப்பர் சுப்பு' என்ற தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்துள்ளார். பாலியல் விழிப்புணர்வை வலியுறுத்தும் தொடராக இது தயாராகி உள்ளது. வருகிற ஜூலை 2ம் தேதி வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : மலையாள சினிமா கொண்டாடும் பிரேம் நசீரின் கைவிலங்குபிளாஷ்பேக் : மலையாள சினிமா ... ஆர்யாவின் அனந்தன் காடு படத்திற்கு ஏ சான்றிதழ் ஆர்யாவின் அனந்தன் காடு படத்திற்கு ஏ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap