Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா | துபாயில் செட்டில் ஆனது ஏன் : யுவன் சங்கர் ராஜா விளக்கம் | மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ : ஜனாதிபதி வழங்கினார் | 60 ஆண்டு அரசியலை விஜயும் செய்ய வேண்டாம்! எஸ்.ஏ.சி அறிவுரை | பாலகிருஷ்ணா படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்! | 4 நாட்களில் 50 கோடி வசூலை கடந்த சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' | விஜயை அன்பாலோ செய்தாரா திரிஷா? | ஜனாதிபதி முர்முவின் ஆவணப் படத்தை தயாரிக்கிறார் அமீர்கான் | முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென் | பிளாஷ்பேக் : 3 படத்தில் ஒரே கேரக்டரில் நடித்த ரேவதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 3 படத்தில் ஒரே கேரக்டரில் நடித்த ரேவதி

23 ஜூன், 2026 - 03:47 IST
எழுத்தின் அளவு:
Revathi-played-the-same-character-in-Flashback-3
Advertisement

இயக்குநர்கள் சித்திக் - லால் கூட்டணியின் வெளிவந்த 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்' என்கிற மலையாளப் படத்தின் மறு உருவாக்கமே 'அரங்கேற்ற வேளை'. மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த பாசில், தமிழிற்கு வரும்போது டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தமிழிற்கு ஏற்ற வகையிலும், அதே சமயத்தில் மூலப் படைப்பின் ஆன்மா சிதைவுறாத வகையிலும் மாற்றம் செய்தார்.

நண்பனிடமிருந்து வாங்கிய கடனை அடைப்பதற்காகச் சென்னைக்கு வருவார் பிரபு. தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கும் பிரபு, வி.கே.ராமசாமி நடத்தி வரும் 'சக்தி நாடக சபா' குழுவில் இணைவார் பிரபு. இவரைப் போலவே இந்த இடத்தில் இன்னொருவரும் தங்கியிருப்பார். அவர் ரேவதி. ஏமாற்று வேலைகளின் மூலம் சம்பாதிக்கும் ரேவதிக்கும், பிரபுவிற்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடக்கும். “இந்த இடத்தை விட்டு உன்னை வெளியேத்திக் காட்டறேன் பாரு” என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்கள். பிரபு, ரேவதி, வி.கே.ஆர் ஆகிய மூவருக்குமே பணத்திற்கான தேவைகளும் அதற்குப் பின்னே நெகிழ்வான காரணங்களும் இருக்கும். இந்த மூவரின் பணச்சிக்கலும் தீருவதற்கு ஒரு போன் மூலம் வழி பிறக்கும், அது என்ன வழி, பிரச்னை தீர்ந்ததா என்பது கதை.

படத்தில் ரேவதியின் கேரக்டர் மற்றவர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றி பணம் பறிப்பது, கேரக்டரின் பெயர் 'மாஷா'. அரங்கேற்றவேளை வெளியான பிறகு இந்த கேரக்டர் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இதனால் இந்த கேரக்டரை மையப்படுத்தி ஒரு படம் இயக்க திட்டமிட்டார் பாசில்.

ஆனால் 2018-ல் வெளியான 'குலேபகாவலி' படத்திலும், 2019-ல் வெளியான 'ஜாக்பாட்' படத்திலும் இதே பாத்திரத்தின் தொடர்ச்சியாக 'மாஷா' என்ற பெயரிலேயே நடித்திருந்தார் ரேவதி. அதனால் தனது திட்டத்தை கைவிட்டார் பாசில்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக விஞ்ஞானியாக மாறிய சிவாஜிபிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக ... முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென் முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

இளந்திரையன் வேலந்தாவளம் மலையாள பதிப்பில் ரேவதி நடித்த பாத்திரம் ஆண் நடிகர் நடித்திருப்பார். ஆனால் தமிழில் உருவாக்கும் போது பெண்ணாக மாற்றியிருப்பார் பாசில்... மசாலா மசாலா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap