தேவா குழுவில் அடுத்த அதிர்ச்சி; அவரது பேவரைட் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார் | அமெரிக்காவில் 54 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர் 2' | மம்முட்டியின் 'படயாத்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | வீட்டிற்கு புல்லட் புரூப் கண்ணாடி பொருத்தும் அக் ஷய் குமார் | ‛மூக்குத்தி அம்மன் 2' டிரைலர் வெளியீடு | சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம் | அதை 8வது டேக்குல வந்து சொல்றீங்க பாருங்க.. பக்ஸை கலாய்த்த ரஜினிகாந்த் | ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் | துப்பாக்கிச்சூடு: டைகர் ஷெராப்-க்கு முன்பு சல்மான்கான்தான் முதல் இலக்காம்! | 'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்! |

பூட்டானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த வருடம் கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆப்பரேஷன் நும்கோர்' என்கிற பெயரில் சோதனை நடத்தியதில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், தான் சட்டபூர்வமான வழிகளிலேயே இந்த வாகனங்களை வாங்கியதாகவும், அவை பூட்டானிலிருந்து கடத்தப்பட்டவை என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் துல்கர் சல்மான் விளக்கமளித்தார். அது தொடர்பான ஆவணங்களையும் அவர் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் துல்கர் சல்மானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் கார்களை வாங்கிய விதம், பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் சுங்கத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.




